கொள்ளிடம் ஆற்றில் மூழ்கி மாணவன் சாவு

கொள்ளிடம் ஆற்றில் மூழ்கி மாணவன் உயிரிழந்தான்

Update: 2022-08-22 19:39 GMT

திருக்காட்டுப்பள்ளி அருகே உள்ள வானரங்குடி புதுத்தெருவை சேர்ந்த குமரேசன் மகன் கவுசிக் (வயது 13). இவர் அங்குள்ள பள்ளி ஒன்றில் 8-ம் வகுப்பு படித்து வந்தார். நேற்று பள்ளி முடிந்ததும் கவுசிக்கும், அவருடைய நண்பர்களும் அருகே உள்ள கொள்ளிடம் ஆற்றில் குளிக்க சென்றனர். அவர்கள் ஆற்றில் இறங்கி குளித்துக்கொண்டிருந்த போது கவுசிக் ஆழமான பகுதிக்கு சென்றதால் நீரில் மூழ்கினார். அவரை நண்பர்கள் காப்பாற்ற முயன்றும் முடியவில்லை. உடனடியாக அவர்கள் ஊருக்குள் சென்று தகவல் தெரிவிக்கவே, ஊர்மக்கள் சிலர் ஆற்றில் இறங்கி மயங்கிய நிலையில் இருந்த கவுசிக்கை மீட்டு திருக்காட்டுப்பள்ளி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் கவுசிக் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து திருக்காட்டுப்பள்ளி போலீசில் குமரேசன் அளித்த புகாரின்பேரில், போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கோவிந்தராஜன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.




Tags:    

மேலும் செய்திகள்