மேலூரில் மின்சாரம் தாக்கி மாணவர் சாவு

மேலூரில் மின்சாரம் தாக்கி மாணவர் பலியானார்.

Update: 2023-05-06 18:55 GMT

மேலூர்,

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியை சேர்ந்தவர் ஹரிஹரன் (வயது 15). சிங்கம்புணரி அரசு மேல்நிலைப்பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார். விடுமுறைக்காக மதுரை மாவட்டம் மேலூர் அருகே சிவகங்கை ரோட்டில் உள்ள பெருமாள்பட்டியில் வசிக்கும் அவரது மாமா மீனாட்சிசுந்தரம் வீட்டிற்கு வந்திருந்தார். நண்பர்களுடன் விளையாட சென்ற அவர் அங்கு ஒரு வீடு கட்டும் இடத்தில் மின்சாரம் கசிவினால் மின்சாரம் பாய்ந்த இரும்பு கம்பி வேலியில் நிலை தடுமாறி விழுந்துள்ளார். மின்சாரம் தாக்கி ஹரிஹரன் அதே இடத்தில் பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் குறித்து மேலூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஆனந்தஜோதி விசாரணை நடத்தி வருகிறார்.

Tags:    

மேலும் செய்திகள்