ராஜபாளையத்தில் லாரி மோதி மாணவன் பலி

ராஜபாளையத்தில் லாரி மோதி மாணவன் பலியானான்.

Update: 2022-12-28 18:56 GMT

ராஜபாளையம்,

ராஜபாளையத்தில் லாரி மோதி மாணவன் பலியானான்.

மாணவன் பலி

ராஜபாளையம் சங்கரன்கோவில் முக்கு பகுதியை சேர்ந்த ராஜேஸ்கண்ணன் மகன் சாய் ஜெகந்த் (வயது 19). இவர் சிவகாசியில் உள்ள தனியார் பயிற்சி மையத்தில் ஆடிட்டருக்கு பயின்று வந்தார்.

இவர் நேற்று மாலை ஜெராக்ஸ் எடுப்பதற்காக காந்தி சிலைக்கு சென்று விட்டு மீண்டும் இரு சக்கர வாகனத்தில் வீடு திரும்பிக்கொண்டிருந்தார்.

அம்பலபுளி பஜார் அருகே இவர் வந்து கொண்டிருந்த போது லாரி இவர் மீது இடித்ததாக கூறப்படுகிறது. இதில் நிலை குலைந்த இவர் லாரியின் சக்கரத்தில் சிக்கிக் கொண்டார். இதில் படுகாயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

லாரி டிரைவர் கைது

இதுகுறித்து தகவல் அறிந்த தெற்கு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் சாய் ஜெகந்தின் உடலை மீட்டு ராஜபாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த விபத்தால் அப்பகுதியில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக தென்காசியை சேர்ந்த லாரி டிரைவர் சரவணக்குமார் (38) என்பவரை ராஜபாளையம் தெற்கு போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்