கிணற்றில் தவறி விழுந்து பள்ளி மாணவன் சாவு

நாகரசம்பட்டி அருகே கிணற்றில் தவறி விழுந்து பள்ளி மாணவன் பரிதாபமாக இறந்தான்.

Update: 2022-08-14 18:06 GMT

காவேரிப்பட்டணம்,

கிருஷ்ணகிரி தாலுகா பாலேகுளி அருகே உள்ள சீத்தகுட்டை பகுதியை சேர்ந்தவர் கோவிந்தசாமி. இவரது மகன் சுதாகர் (வயது 17). இவன் பாலேகுளி அரசு உயர்நிலைப்பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தான். நேற்று முன்தினம் சுதாகர் விவசாய நிலத்திற்கு சென்றபோது எதிர்பாராதவிதமாக அங்குள்ள கிணற்றில் தவறி விழுந்தான். இதில் பலத்த காயம் அடைந்த அவனை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக காவேரிப்பட்டணம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே சுதாகர் பரிதாபமாக இறந்தான். இது குறித்து நாகரசம்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜேஷ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags:    

மேலும் செய்திகள்