மாணவி மரண வழக்கு: பள்ளியில் முதன்மை கல்வி அதிகாரி விசாரணை

கள்ளக்குறிச்சியில் பள்ளி மாணவி இறந்த விவகாரம் தொடர்பாக ஏற்பட்ட வன்முறை சம்பவம் தமிழகத்தையே உலுக்கியுள்ளது.;

Update:2022-07-18 12:11 IST

கள்ளக்குறிச்சி,

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள தனியார் பள்ளியில் விடுதியில் தங்கி படித்துவந்த 12-ம் வகுப்பு மாணவி ஸ்ரீமதி விடுதியில் மரணம் அடைந்த விவகாரம் தொடர்பாக, நேற்று அந்த பள்ளி முன்பு போராட்டம் நடத்திய போராட்டக்காரர்கள் பள்ளிக்குள் புகுந்து சூறையாடினர். பள்ளி மாணவி இறந்த விவகாரம் தொடர்பாக நடந்த போராட்டத்தில் ஏற்பட்ட வன்முறை சம்பவம் தமிழகத்தையே உலுக்கியுள்ளது.


இதைத் தொடர்ந்து மாணவி உயிரிழந்த விவகாரம் தொடர்பாக சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதோடு வன்முறையில் ஈடுபட்டவர்களை கைது செய்யும் நடவடிக்கையில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.


இந்த நிலையில், மாணவி ஸ்ரீமதி மரண வழக்கு தொடர்பாக சம்பந்தப்பட்ட தனியார் பள்ளியில் கள்ளக்குறிச்சி முதன்மை கல்வி அதிகாரி விஜயலட்சுமி, மாவட்ட கல்வி அதிகாரி சிவராமன், பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஆகியோர் நேரில் சென்று ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். வன்முறையால் பள்ளியில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை அதிகாரிகள் பார்வையிட்டும் வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்