மயிலம் அருகே கிணற்றில் தவறி விழுந்து கல்லூரி மாணவர் சாவு செல்பி எடுத்தபோது விபரீதம்

மயிலம் அருகே செல்பி எடுத்தபோது கிணற்றில் தவறி விழுந்த கல்லூரி மாணவர் உயிரிழந்தார்.

Update: 2022-05-28 17:11 GMT

மயிலம்

புதுச்சேரி அருகே உள்ள கூனிச்சம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் பாலு. இவரது மகன் அரவிந்தன் (வயது 17). இவர் திருச்சி ஜோசப் கல்லூரியில் பி.ஏ. முதலாமாண்டு படித்து வந்தார்.

இவர், நேற்று விழுப்புரம் மாவட்டம் மயிலம் அருகே உள்ள தென் ஆலப்பாக்கத்தில் உள்ள தனது நண்பர் மதன் என்பவரது வீட்டுக்கு சென்றார். பின்னர் மதியம் 2 மணிக்கு நண்பர்கள் 5 பேருடன் சேர்ந்து குளிப்பதற்காக வயலுக்கு சென்றுள்ளனர்.

தவறி விழுந்தார்

அந்த பகுதியில் நாமதேவன் என்பவருக்கு சொந்தமான கிணற்றில் அவர்கள் குளித்து கொண்டிருந்தனர். அப்போது, கிணற்றின் கரைபகுதியில் நின்று கொண்டிருந்த அரவிந்தன் செல்போனில் செல்பி எடுத்துள்ளார்.

திடீரென அவர் கிணற்றுக்குள் தவறி விழுந்தார். அரவிந்தனுக்கு நீச்சல் தெரியாது என்பதால், அவரால் வெளியே வர முடியவில்லை. மேலும் அவரது நண்பர்கள் தேடி பார்த்தும், மீட்க முடியவில்லை.

போலீசார் விசாரணை

இதுபற்றி தகவல் அறிந்த திண்டிவனம் தீயணைப்பு வீரர்கள் நிலைய அலுவலர் சுரேஷ்சேவியர் தலைமையில் விரைந்து வந்து, அரவிந்தனை பிணமாக மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். சம்பவ இடத்துக்கு வந்த மயிலம் சிறப்பு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முருகன் தலைமையிலான போலீசார்,

அரவிந்தனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்