திருப்புவனம்,
திருப்புவனம் நெல்முடிகரை பகுதியை சேர்ந்தவர் பூர்ணாதேவி. இவரது மகன் ஜீவசூர்யா (வயது 18). இவர் தனியார் கல்லூரியில் பி.ஏ. முதலாம் ஆண்டு படித்து வந்தார். ஜீவசூர்யா ஒரு பெண்ணை காதலித்து வந்ததாகவும், இதனை அவரது தாயார் கண்டித்ததாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவில் வீட்டு மாடியில் உள்ள அறையில் ஜீவசூர்யா தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக கிடந்தார். இதுகுறித்து பூர்ணாதேவி திருப்புவனம் போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆதிலிங்கம்போஸ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.