கிணற்றில் குதித்து மாணவி தற்கொலை
கிணற்றில் குதித்து மாணவி தற்கொலை செய்து கொண்டாா்.
அந்தியூர்
அந்தியூரை அடுத்த வெள்ளித்திருப்பூர் பகுதியை சேர்ந்த 13 வயது மாணவி அந்த பகுதியில் உள்ள அரசு பள்ளிக்கூடத்தில் படித்து வந்தார். இவர் சரியாக படிக்கவில்லை என மாணவியை அவருடைய பெற்றோர் திட்டியதாக கூறப்படுகிறது. இதனால் அந்த மாணவி மனமுடைந்து அந்த பகுதியில் உள்ள கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்த தகவல் கிடைத்ததும் அந்தியூர் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று கிணற்றில் இருந்து மாணவியின் உடலை மீட்டு வெள்ளத்திருப்பூர் போலீசிடம் ஒப்படைத்தனர். மாணவியின் உடலை போலீசார் கைப்பற்றி அந்தியூர் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.