மாணவன் தூக்கு போட்டு தற்கொலை

கோவில்பட்டி அருகே மாணவன் தூக்கு போட்டு தற்கொலைசெய்து கொண்டான்.

Update: 2023-03-27 18:45 GMT

கோவில்பட்டி:

கோவில்பட்டி அருகே உள்ள இலுப்பையூரணி பெருமாள் நகரைச் சேர்ந்தவர் சுசிகரன். இவரது மனைவி வித்யா சரஸ்வதி. சுசிகரன் பள்ளி வாசலில் பெட்டிக்கடை வைத்துள்ளார். இவரது மகன் குகன் (வயது 13). இவன் நகராட்சி நடுநிலைப்பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தான். வீட்டில் இருக்கும் 2 செல்போன்களில் நண்பர்களுடன் பப்ஜி, ப்ரிபயர் போன்ற கேம்களை விளையாடி வந்துள்ளார். வீட்டில் பெற்றோர் பலமுறை கண்டித்தும், அவன் செல்போனில் கேம் விளையாடி வந்ததாக கூறப்படுகிறது. நேற்று முன்தினம் 2 செல்போன்களிலும் நெட் தீர்ந்ததால், ரீசார்ஜ் செய்யுமாறு பெற்றோரிடம் கேட்டுள்ளான். இதற்கு அவர்கள் மறுத்துவிட்டார்களாம். இதனால் மனம்உடைந்த குகன் வீட்டில் தாயின் சேலையால் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து கோவில்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்