விஷம் தின்று மாணவி தற்கொலை

விஷம் தின்று மாணவி தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2023-07-14 18:58 GMT

தா.பழூர்:

விஷம் தின்றார்

அரியலூர் மாவட்டம், தா.பழூர் அருகே உள்ள கார்குடி கீழத்தெருவை சேர்ந்தவர் செந்தில்சந்திரன். இவரது மனைவி செல்வகுமாரி. இந்த தம்பதிக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உண்டு. இதில் மகள் ஸ்ரீதனா(வயது 16) நடுவலூரில் உள்ள ஒரு பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து தேர்ச்சி பெற்றார். இதையடுத்து அவரது பெற்றோர், அவரை வேறு ஒரு பள்ளியில் பிளஸ்-1 வகுப்பில் சேர்த்துள்ளனர்.

இதில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக ஸ்ரீதனா கடந்த மாதம் 6-ந் தேதி பூச்சிக்கொல்லி மருந்தை(விஷம்) தின்றார். இதையறிந்த பெற்றோர், ஸ்ரீதனாவை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு முதலுதவி அளிக்கப்பட்டு, மேல்சிகிச்சைக்காக அரியலூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

சாவு

பின்னர் தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு, அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்தார். இருப்பினும் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இரவு அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து செல்வகுமாரி தா.பழூர் போலீசில் அளித்த புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் வேல்முருகன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags:    

மேலும் செய்திகள்