மாவட்ட அளவிலான கலை திருவிழா போட்டி:முதலிடம் பிடித்த கீழ்வேளூர் மாணவிக்கு பாராட்டு

மாவட்ட அளவிலான கலை திருவிழா போட்டியில் முதலிடம் பிடித்த கீழ்வேளூர் மாணவிக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

Update: 2022-12-24 19:00 GMT

நாகை மாவட்ட அளவில் நடந்த கலை திருவிழா போட்டியில் கடம்பன்குடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி 8-ம் வகுப்பு மாணவி திவ்யதர்ஷினி, கவிதை போட்டியில் ஒன்றிய அளவில் முதலிடம் மற்றும் மாவட்ட அளவிலும் முதலிடம் பிடித்தார். இதையடுத்து அவர் மாநில அளவில் மதுரையில் நடைபெற உள்ள போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார். முதலிடம் பிடித்த மாணவி திவ்யதர்ஷினியை மாவட்ட கலெக்டர் அருண் தம்புராஜ் பாராட்டி சான்றிதழ் மற்றும் கேடயம் வழங்கினார். அதேபோல் பள்ளியில் நடந்த நிகழ்ச்சியில் மாணவி திவ்யதர்ஷினியை ஒக்கூர் ஊராட்சி மன்ற தலைவர் ஜெயமாலா ரமேஷ் சால்வை அணிவித்து பாராட்டி, நிதிஉதவி வழங்கினார். நிகழ்ச்சியில் பள்ளி மேலாண்மை குழு தலைவர் சத்யா, தலைமை ஆசிரியர் ஜெயந்தி மற்றும் ஆசிரியர்கள், மேலாண்மை குழு உறுப்பினர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். 

Tags:    

மேலும் செய்திகள்