பாபநாசம் குடமுருட்டி ஆற்றில் மூழ்கிய மாணவன் உடல் மீட்பு

பாபநாசம் குடமுருட்டி ஆற்றில் மூழ்கிய மாணவன் உடல் மீட்பு

Update: 2022-06-19 19:47 GMT

பாபநாசம்:

பாபநாசம் தாலுகா திருப்பாலத்துறை வடக்குமட வளாகத்தை சேர்ந்த பிச்சை செல்வம் மகன் பாலமுருகன் (வயது16). இவர் 11-ம் வகுப்பு படித்து வந்தார். சம்பவத்தன்று தனது தாய் மகாதேவியுடன், பாலமுருகன் திருப்பாலத்துறை குடமுருட்டி ஆற்றில் குளிக்க சென்றார். அப்போது ஆற்றில் மூழ்கி அடித்து செல்லப்பட்டார். தகவல் அறிந்ததும் பாபநாசம் தீயணைப்பு வீரர்கள் கிராம மக்கள் உதவியுடன் ஆற்றில் மூழ்கிய பாலமுருகனை தேடி வந்தனர். இந்தநிலையில் உத்தாணி குடமுருட்டி ஆற்றின் வடகரை பகுதியில் பாலமுருகன் உடல் மீட்கப்பட்டது. பின்னர் பிரேத பரிசோதனைக்காக அவர் உடல் பாபநாசம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இது குறித்து பாபநாசம் போலீஸ் இன்ஸ்பெக்டர் அழகம்மாள், சப்-இன்ஸ்பெக்டர் இளமாறன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்