அரசு பள்ளி சார்பில் மாணவர் சேர்க்கை பேரணி
தென்காசியில் அரசு பள்ளி சார்பில் மாணவர் சேர்க்கை பேரணி நடந்தது.
தென்காசி:
தென்காசி 13-வது வார்டு நகராட்சி நடுநிலைப்பள்ளி சார்பில் மாணவர் சேர்க்கை பேரணி நடைபெற்றது. பள்ளி தலைமை ஆசிரியை கற்பகம் தலைமை தாங்கினார். கவுன்சிலர் நாகூர்மீரான் முன்னிலை வகித்தார். பேரணியை வட்டார கல்வி அலுவலர்கள் சண்முக சுந்தர பாண்டியன் மற்றும் இள முருகன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
இதில் பள்ளி மேலாண்மைக்குழு உறுப்பினர்கள், பெற்றோர், பொதுமக்கள், மாணவர்கள் மற்றும் முன்னாள் மாணவர்கள் கலந்து கொண்டனர். இந்த பேரணி பள்ளியில் தொடங்கி மவுண்ட் ரோடு, மேல பாறையடி தெரு, முனிசிபல் காலனி வழியாக மீண்டும் பள்ளியை வந்தடைந்தது. இதற்கான ஏற்பாடுகளை ஆசிரியர்கள் கவுசல்யா, மணி மந்திரி, எப்சிபா, யாஸ்மின், விமலா, தமிழ்ச்செல்வி, மாரியம்மாள், ஈஸ்வரன் ஆகியோர் செய்திருந்தனர். முடிவில் ஆசிரியர் வின்சென்ட் நன்றி கூறினார்.