கரும்பு ஆராய்ச்சி நிலையத்தில் பட்டயப்படிப்புக்கான மாணவர் சேர்க்கை

கரும்பு ஆராய்ச்சி நிலையத்தில் பட்டயப்படிப்புக்கான மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளது என அதிகாரி தெரிவித்தார்.

Update: 2022-06-16 17:51 GMT

கடலூர், 

கடலூர் கரும்பு ஆராய்ச்சி நிலைய பேராசிரியரும், தலைவருமான சசிக்குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் கீழ் கடலூரில் கரும்பு ஆராய்ச்சி நிலையம் இயங்கி வருகிறது. இங்கு திறந்தவெளி மற்றும் தொலைதூரக்கல்வியின் மூலம் படிக்க மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளது. அதாவது வேளாண் இடுபொருள், உயிரியல் பூச்சி மற்றும் நோய் கொல்லிகள் உற்பத்தி குறித்த பட்டயப்படிப்பு படிப்பதற்கு 10-ம் வகுப்பு தேர்ச்சி அல்லது தோல்வி அடைந்தவர்கள் விண்ணப்பிக்கலாம். இதில் 6 மாத காலம் மற்றும் ஓராண்டு படிப்பு உள்ளது. இதேபோல் நவீன கரும்பு சாகுபடி தொழில்நுட்பங்கள் குறித்த சான்றிதழ் படிப்பு படிப்பதற்கு 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இது ஓராண்டு படிப்பாகும். இந்த பட்டயப்படிப்பு மற்றும் சான்றிதழ் படிப்பு அனைத்தும் தமிழ் மொழியிலேயே பயிற்றுவிக்கப்படும். இதுதொடர்பான கூடுதல் விவரங்களை கடலூர் கரும்பு ஆராய்ச்சி நிலையம் பேராசிரியர் மற்றும் தலைவரை 04142-220630 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு அறிந்து கொள்ளலாம். எனவே கரும்பு ஆராய்ச்சி நிலையத்தில் பட்டயப்படிப்பு மற்றும் சான்றிதழ் படிப்பு படிக்க விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பித்து பயன்பெறலாம்.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்