மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு ஊர்வலம்

பேரளி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது.

Update: 2023-04-23 19:44 GMT

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் தாலுகா பேரளி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் மாணவர் சேர்க்கை குறித்த விழிப்புணர்வு ஊர்வலம் மேளதாளத்துடன் நடைபெற்றது. இதற்கு பள்ளி மேலாண்மைக்குழு தலைவர் ரேகா தலைமை தாங்கினார். பள்ளி தலைமை ஆசிரியர் ஜான்சிராணி வரவேற்றார். ஊர்வலத்தை பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் தமிழரசன் தொடங்கி வைத்தார். ஊர்வலத்தில் 5 வயது நிரம்பிய குழந்தைகளை அரசுப்பள்ளியில் சேர்ப்போம். நமது பள்ளி அரசுப்பள்ளி போன்ற விழிப்புணர்வு முழக்கம் எழுப்பப்பட்டது. எண்ணும் எழுத்தும் செயல்பாட்டினையும் அரசின் நலத்திட்டங்கள் குறித்தும் விளக்கி துண்டுப் பிரசுரங்கள் வழங்கப்பட்டன. ஊர்வலமானது முக்கிய தெருக்களின் வழியாக சென்று இறுதியில் பள்ளியை அடைந்தது. இதில் பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்கள், இல்லம் தேடிக் கல்வி தன்னார்வலர்கள், பெற்றோர்கள், கிராம மக்கள், பள்ளி ஆசிரியர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்