திறனாய்வு தேர்வில் மாணவி சாதனை

திறனாய்வு தேர்வில் கீழக்கலங்கல் அரிசன் நடுநிலைப்பள்ளி மாணவி பிரதிபா வெற்றி பெற்று சாதனை படைத்தார்.

Update: 2023-04-17 18:45 GMT

ஆலங்குளம்:

ஆலங்குளம் சரகம் கீழக்கலங்கல் அரிசன் நடுநிலைப்பள்ளியை சேர்ந்த 8-ம் வகுப்பு மாணவி த.பிரதிபா, 2022-2023-ம் கல்வியாண்டில் நடந்த தேசிய திறனாய்வு தேர்வில் தோ்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளார்.

வெற்றி பெற்ற மாணவியை ஆலங்குளம் சரக உதவி தொடக்க கல்வி அலுவலர் லோகநாதன், பள்ளி நிர்வாகி, தலைமை ஆசிரியை மற்றும் ஆசிரியர்கள், ஊர் பொதுமக்கள் பாராட்டினர்.

Tags:    

மேலும் செய்திகள்