தலை முடியை மாடலாக வெட்டியதை தந்தை கண்டித்ததால் 10-ம் வகுப்பு மாணவன் வீட்டை விட்டு ஓட்டம்
மாரண்டஅள்ளி:
மாரண்டஅள்ளி அருகே உள்ள கணவனஅள்ளியை சேர்ந்தவர் மாதப்பன். கூலித்தொழிலாளி. இவருடைய மகன் நித்திஷ் (வயது 15). இவன், கோட்டூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறான். அரையாண்டு விடுமுறையின் போது நித்திஷ், தலை முடியை மாடலாக வெட்டி விட்டு, வீட்டிற்கு வந்துள்ளான். இதனை அவனுடைய தந்தை மாதப்பன் கண்டித்துள்ளார். இதனால் மனவேதனை அடைந்த நித்திஷ், சம்பவத்தன்று வீட்டை விட்டு ஓட்டம் பிடித்தான். அவனை பல்வேறு இடங்களில் தேடியும், கண்டுபிடிக்க முடியவில்லை. இதுகுறித்து மாதப்பன் மாரண்டஅள்ளி போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.