காவேரிப்பட்டணம் அருகே மின்சாரம் தாக்கி கல்லூரி மாணவர் படுகாயம்

காவேரிப்பட்டணம் அருகே மின்சாரம் தாக்கி கல்லூரி மாணவர் படுகாயம்

Update: 2022-09-01 17:15 GMT

காவேரிப்பட்டணம்:

காவேரிப்பட்டணம் அடுத்த நடுப்பையூரை சேர்ந்த சக்தி, செல்வராணி தம்பதியரின் மகன் தமிழ் என்ற சதீஷ்குமார் (வயது 19). இவர் பாலக்கோடு கூட்டுறவு சர்க்கரை ஆலை பாலிடெக் கல்லூரியில் டிப்ளமோ படித்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் நடுப்பையூர் ஏரி அருகே உள்ள விவசாய நிலத்தற்கு சென்றார். அப்போது அந்த பகுதியில் தாழ்வாக சென்ற மின்கம்பியை கவனிக்காமல் சென்ற சதீஷ்குமார் மீது மின்கம்பி பட்டு மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தார். பின்னர் அவர் கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேல்சிகிச்சைக்காக பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து காவேரிப்பட்டணம போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்