பாதை கேட்டு இறந்தவர் உடலுடன் போராட்டம்

பாதை கேட்டு இறந்தவர் உடலுடன் போராட்டம் நடத்தினர்.

Update: 2022-10-12 20:22 GMT

மணப்பாறையை அடுத்த வள்ளுவபட்டியைச் சேர்ந்த 80 வயது முதியவர் உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். இதையடுத்து அவரது உடலை எடுத்து செல்லும் பாதையில் தனியார் ஒருவருக்கு இடபிரச்சினை இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் அதில் முள்வேலியை அமைத்திருந்த நிலையில் அதை அகற்றினால் மட்டுமே உடலை எடுத்துச் செல்ல முடியும் என்று கூறி இறந்தவரின் உடலை வைத்து திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்த வையம்பட்டி போலீசார் மற்றும் வருவாய்துறையினர் சம்பவ இடத்துக்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தி முள்வேலியை அகற்றியதை அடுத்து உடல் எடுத்துச் செல்லப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்