விளைநிலங்களை ஏலம் விடுவதை தடுக்கக்கோரி போராட்டம்

பழனி முருகன் கோவிலுக்கு சொந்தமான விளைநிலங்களை ஏலம் விடுவதை தடுக்கக்கோரி விவசாயிகள் போராட்டம் நடத்தினர்.

Update: 2022-08-11 15:56 GMT

பழனி, பாலசமுத்திரம், அய்யம்புள்ளி பகுதியை சேர்ந்த விவசாயிகள் பலர் நேற்று பழனி ஆர்.டி.ஓ. அலுவலகத்துக்கு திரண்டு வந்தனர். பின்னர் பழனி முருகன் கோவிலுக்கு சொந்தமான விளைநிலங்கள் முன் அறிவிப்பு இன்றி ஏலம் விடப்படுவதாகவும், அதை தடுக்க வேண்டும் என்று கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர். அதைத்தொடர்ந்து போலீசார், வருவாய்த்துறை அதிகாரிகள் அங்கு வந்து விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அதன்பிறகு ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் விவசாயிகள் கோரிக்கை மனு ஒன்றை அளித்தனர். அந்த மனுவில், பழனி முருகன் கோவிலுக்கு சொந்தமான விளைநிலங்கள் பழனியை சுற்றிலும் உள்ளது. இவற்றில் 60 ஆண்டுகளுக்கும் மேலாக நெல் விவசாயம் செய்து வருகிறோம். அதற்கான குத்தகையை முறையாக கோவிலுக்கு செலுத்தி வருகிறோம். இந்நிலையில் எவ்வித முன்னறிவிப்பும் இன்றி திடீரென கோவில் சார்பில் விளைநிலங்களை ஏலம் விடப்போவதாக அறிவித்துள்ளனர். இதனால் எங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படும். எனவே இதற்கு உரிய நடவடிக்கை எடுத்து ஏலத்தை நிறுத்த வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்