குண்டும், குழியுமான சாலையை சீரமைக்காவிட்டால் போராட்டம்

ஞ்சநதிக்குளம் நடுச்சேத்தி ஊராட்சியில் குண்டும், குழியுமான சாலையை சீரமைக்காவிட்டால் போராட்டம் நடத்தப்படும் என பொதுமக்கள் அறிவித்துள்ளனர்.

Update: 2022-06-19 16:35 GMT

வாய்மேடு:

பஞ்சநதிக்குளம் நடுச்சேத்தி ஊராட்சியில் குண்டும், குழியுமான சாலையை சீரமைக்காவிட்டால் போராட்டம் நடத்தப்படும் என பொதுமக்கள் அறிவித்துள்ளனர்.

குண்டும், குழியுமான சாலை

நாகை மாவட்டம் வாய்மேட்டை அடுத்த பஞ்சநதிக்குளம் நடுச்சேத்தி ஊராட்சியில் ஓ.என்.ஜி.சி சாலையில் இருந்து கூழையன்காடு வரை உள்ள ஒன்றரை கிலோமீட்டர் தூரம் சாலை சேதமடைந்துள்ளது.

கப்பி கற்கள் பெயர்ந்து குண்டும், குழியுமாக காணப்படும் இந்த சாலையை போக்குவரத்துக்கு பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. இந்த சாலை வழியாக பொதுமக்கள் தங்களது அத்தியாவசிய பொருட்களை வாங்குவதற்கு கடைத்தெருவுக்கும், பள்ளி, கல்லூரிகளுக்கு மாணவ, மாணவிகள் இந்த வழியாக சென்று வருகின்றனர்.

சீரமைக்காவிட்டால் போராட்டம்

சாலை சேதமடைந்துள்ளதால் இந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வருகின்றனர். கப்பி கற்கள் பெயர்ந்துள்ளதால் இருசக்கர வாகனத்தில் வருபவர்கள் தடுமாறி கீழே விழுந்து காயம் அடைகின்றனர். சேதமடைந்த சாலையை சீரமைக்கக்கோரி பலமுறை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் மனுக்கள் அளித்தும், நேரடியாக தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என அந்த பகுதி பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சேதமடைந்த சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் மற்றும் அந்த பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சீரமைக்காவிட்டால் போராட்டத்தில் ஈடுபடுவோம் என அந்த பகுதி பொதுமக்கள் அறிவித்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்