உடுமலை
புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்துசெய்து, ஏற்கனவே உள்ள பயனளிப்பு ஓய்வூதியத்திட்டத்தை அமல்படுத்த வேண்டும். முறையான ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு ஊதியக்குழு நியமித்த குறைந்த பட்ச ஓய்வூதியத்தை சத்துணவு, அங்கன்வாடி, கிராம உதவியாளர், ஊர்ப்புற நூலகர் உள்ளிட்ட சிறப்பு ஓய்வூதியம் பெறுகிற அனைவருக்கும் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்க உடுமலை கிளையின் சார்பில் உடுமலை தாலுகா அலுவலகம் முன் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் உடுமலை கிளை தலைவர் டி.இ.தாசன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் எஸ்.பாலகிருஷ்ணன் சிறப்புரையிற்றினார்.உடுமலை கிளை பொருளாளர் பி.எஸ்.சுரேஷ்குமார் நன்றி கூறினார்.