கோபி நகராட்சியில் ஊதிய உயர்வு கோரி ஒப்பந்த தொழிலாளர்கள் காத்திருப்பு போராட்டம்

கோபி நகராட்சியில் ஊதிய உயர்வு கோரி ஒப்பந்த தொழிலாளர்கள் காத்திருப்பு போராட்டம்

Update: 2023-05-17 21:29 GMT

கடத்தூர்

கோபி நகராட்சியில் 250-க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்களில் 50-க்கும் மேற்பட்டோர் ஒப்பந்த அடிப்படையில் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக வேலை செய்து வருகின்றனர். இவர்களுக்கு நாள்தோறும் 440 ரூபாய் தினக்கூலியாக வழங்கப்படுகிறது

தூய்மை பணியாளர்களுக்கு தினக்கூலியாக ரூ.610 வழங்க வேண்டும் என கடந்த 2017-ம் ஆண்டு அரசாணை வெளியிடப்பட்ட நிலையில் இதுவரை இந்த அரசாணையை அமல்படுத்தவில்லை. அதை உடனடியாக அமல்படுத்த வேண்டும். ஏப்ரல் மாதம் வழங்க வேண்டிய ஊதியம் இதுவரை வழங்கப்படவில்லை. அதை உடனடியாக வழங்க வேண்டும் என்று நேற்று காலை கோபி நகராட்சி அலுவலகம் முன்பு ஒப்பந்த தொழிலாளர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்