நில ஆவணங்களை எரித்து பொதுமக்கள் போராட்டம்

சிப்காட் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து நில ஆவணங்களை எரித்து பொதுமக்கள் போராட்டம் நடைபெற்றது.

Update: 2023-05-14 18:45 GMT

மோகனூர்

மோகனூர் ஒன்றியம் வளையப்பட்டி, அரூர், ஆண்டாபுரம், அரசநத்தம், என்.புதுப்பட்டி, பரளி, லத்துவாடி ஆகிய ஊராட்சி பகுதிகளில் சிப்காட் அமைத்திட தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்த சிப்காட் அமைப்பதற்கு அந்த பகுதியை சேர்ந்த விவசாயிகள், பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து, ஆடு, மாடுகளை ஒப்படைத்தல், மண்டியிட்டு ஆர்ப்பாட்டம் என பல்வேறு கட்ட போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். ஆனால் இதுவரை அரசு அதிகாரிகள் சம்பந்தப்பட்ட விவசாயிகளிடம் எந்தவித பேச்சுவார்த்தை நடத்தவில்லை என்று கூறப்படுகிறது. இந்தநிலையில் நேற்று வளையப்பட்டியில் இருந்து மோகனூர் செல்லும் ரோட்டில், காட்டுபுத்தூர் பிரிவு ரோடு அருகே விவசாய முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் பாலசுப்பிரமணி தலைமையில் பாடைகட்டி, பாடையில் ஆவணங்களை வைத்து, பெண்கள் ஒப்பாரி வைத்து, ஊர்வலமாக எடுத்து சென்றனர். பின்னர் சுடுகாட்டில் நில ஆவணங்களை எரித்து போராட்டம் செய்தனர். ஆர்ப்பாட்டத்தில் விவசாய முன்னேற்ற கழக உயர்மட்ட குழு தலைவர் ராமசாமி, சிப்காட் எதிர்ப்பு குழு ராம்குமார், பழனிவேல், சரவணன், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி மோகனூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் பிரபு என்கிற சிவக்குமார், பா.ஜ.க. மாவட்ட நிர்வாகி பிரபாகரன், தே.மு.தி.க. சீனிவாசன் உள்பட பல்வேறு கட்சி நிர்வாகிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்