நம்பியூர், சத்தியில் சத்துணவு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

நம்பியூர், சத்தியில் சத்துணவு ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2023-05-03 21:55 GMT

நம்பியூர், சத்தியில் சத்துணவு ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

நம்பியூர்

நம்பியூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு சத்துணவு ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டத்துக்கு நம்பியூர் வட்டார சத்துணவு ஊழியர் சங்க தலைவர் முருகையன் தலைமை தாங்கினார். ஊழியர் சங்க செயலாளர் பூங்கோதை, பொருளாளர் அம்பிகா ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக சத்துணவு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் தனுஷ்கோடி ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்.

நம்பியூர் வட்டார சத்துணவு ஊழியர் சங்க நிர்வாகிகள் சத்தியகலா, மாவட்ட துணை தலைவர் சுப்புலட்சுமி, ஓய்வு பெற்ற சத்துணவு ஊழியர் சங்க தலைவர் முருகசாமி உள்பட பலர் கலந்துகொண்டனர்.

சத்தியமங்கலம்-அந்தியூர்

இதேபோல் சத்தி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் எதிரில் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு சத்தியமங்கலம் ஒன்றிய சத்துணவு ஊழியர்கள் சங்க தலைவர் சாமிநாதன் தலைமை தாங்கினார். மாநில செயற்குழு உறுப்பினர் சசிகலா முன்னிலை வகித்தார். காலை உணவு திட்டத்தையும் சத்துணவு ஊழியர்கள் மூலமாக வழங்கவேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

அந்தியூரில் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு வட்டார தலைவர் பரமேஸ்வரன் தலைமை தாங்கினார். இதில் சத்துணவு ஊழியர்கள் பலர் கலந்து கொண்டனர். 

Tags:    

மேலும் செய்திகள்