நில அளவை அலுவலர்கள் தர்ணா போராட்டம்

கிருஷ்ணகிரி கலெக்டர் அலுவலகம் முன்பு நில அளவை அலுவலர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2023-02-08 18:45 GMT

கிருஷ்ணகிரி கலெக்டர் அலுவலகம் முன்பு நில அளவை அலுவலர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தர்ணா போராட்டம்

கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு, தமிழ்நாடு நில அளவை அலுவலர்கள் சங்கம் சார்பில், 26 கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று மாலை தர்ணா போராட்டம் நடந்தது. இதற்கு மாவட்ட தலைவர் பெரியசாமி தலைமை தாங்கினார். கோட்ட தலைவர் கோவிந்தராஜன் வரவேற்றார். மாவட்ட செயலாளர் பிரகாஷ், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் சந்திரன், பொது சுகாதார அலுவலர் சங்க மாநில துணைத்தலைவர் தினேஷ் ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.

இந்த போராட்டத்தில், களப்பணியாளர்களின் பணிச்சுமையை குறைக்க வேண்டும். நில அளவை சார்ந்த அனைத்து பணிகளையும் கருத்தில் கொள்ளாமல் உட்பிரிவு பட்டா மாறுதல் பணியை மட்டும் ஆய்வுக்குட்படுத்தும் போக்கை கைவிட வேண்டும். கடுமையான பணிச்சுமையுடன் வேலை பார்க்கும் நில அளவர்கள் முதல் உதவி இயக்குனர்கள் வரை நிலுவை மனுக்களை காரணம் காட்டி ஏற்படுத்தப்பட்டுள்ள குற்ற குறிப்பாணை மற்றும் ஒழுங்கு நடவடிக்கைகளை கைவிட வேண்டும்.

கோஷங்கள்

நில அளவர் முதல் கூடுதல் இயக்குனர் வரை காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். இந்த ஆண்டு குறுவட்ட அளவர்களாக பதவி உயர்வு பெற உள்ள நில அளவர்களுக்கு பாதிப்பு இல்லாமல், ஏற்கனவே நில அளவர்களாக ஒரு முறை தரம் இறக்கப்பட்ட குறுவட்ட அளவர் பதவியை மீள தரம் உயர்த்தி வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். முடிவில் மாவட்ட பொருளாளர் மோகன் நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்