கிராம நிர்வாக அலுவலர்கள் முன்னேற்ற சங்கத்தினர் உள்ளிருப்பு போராட்டம்

ஓசூர் உதவி கலெக்டர் அலுவலகத்தில் கிராம நிர்வாக அலுவலர்கள் முன்னேற்ற சங்கத்தினர் உள்ளிருப்பு போராட்டம்

Update: 2022-10-07 18:45 GMT

ஓசூர்:

தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் முன்னேற்ற சங்கத்தின், கிருஷ்ணகிரி மாவட்ட மையம் சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி, ஓசூர் உதவி கலெக்டர் அலுவலத்தில் நேற்று உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்திற்கு சங்கத்தின் மாவட்ட தலைவர் பூபதி தலைமை தாங்கினார். மாநில ஒழுங்கு நடவடிக்கை குழு தலைவர் மூர்த்தி, மாவட்ட செயலாளர் பாலசுப்பிரமணியன் மாவட்ட பொருளாளர் பரமசிவம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் நிர்வாகிகள் பூபதி, மூர்த்தி, பாலசுப்பிரமணியன் ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். இதில் கிராம நிர்வாக அலுவலர்கள், சங்க நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

போராட்டத்தில் ஓசூர் தாலுக்கா மோரனப்பள்ளி கிராம நிர்வாக அலுவலரை நாட்ராம்பாளையம் கிராமத்திற்கு, பணிமாறுதல் செய்ததை திரும்பப்பெற வேண்டும். மேலும், விதிமுறைக்கு மாறாக, ஒரு குறிப்பிட்ட நபருக்கு, "ஏ" கிராமம், மீண்டும், மீண்டும் வழங்கும் போக்கை கைவிட வேண்டும். மாவட்டத்தின் 8 தாலுகாவில் இருந்தும் 200-க்கும் மேற்பட்ட கிராம நிர்வாக அலுவலர்கள் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கைகளில் பதாகைகளை ஏந்தியவாறு கோஷங்கள் எழுப்பினர். இதன் காரணமாக, உதவி கலெக்டர் அலுவலக வளாகம் பரபரப்பாக காணப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்