ஊராட்சி தலைவர், பொதுமக்கள் தர்ணா போராட்டம்

தெருவிளக்கு அமைத்து தராத மின்வாரியத்தை கண்டித்து ஊராட்சி தலைவர் தலைமையில் பொதுமக்கள் நல்லம்பள்ளியில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2022-09-21 18:45 GMT

நல்லம்பள்ளி:

தெருவிளக்கு அமைத்து தராத மின்வாரியத்தை கண்டித்து ஊராட்சி தலைவர் தலைமையில் பொதுமக்கள் நல்லம்பள்ளியில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தர்ணா போராட்டம்

தர்மபுரி மாவட்டம் அதியமான்கோட்டை ஊராட்சிக்குட்பட்ட கிராமங்களில் புதிய தெருவிளக்குகள் அமைத்து தரக்கோரி மின் வாரியத்திற்கு ஊராட்சி நிர்வாகம் சார்பில் கடந்த 6 மாதத்திற்கு முன்பு விண்ணப்பம் கொடுக்கப்பட்டது. ஆனால் இதுவரை மின்வாரிய நிர்வாகம் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது. இதுகுறித்து ஊராட்சி நிர்வாகம் சார்பில் பலமுறை கேட்டும் கண்டு கொள்ளவில்லை என கூறப்படுகிறது.

இந்தநிலையில் தெருவிளக்கு அமைத்து தராத மின்வாரியத்தை கண்டித்து நல்லம்பள்ளியில் உள்ள உதவி மின்வாரிய பொறியாளர் அலுவலகம் முன்பு நேற்று அதியமான்கோட்டை ஊராட்சி மன்ற தலைவர் மாரியம்மாள் முனிராஜ் தலைமையில் பொதுமக்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் மற்றும் மின்வாரிய அதிகாரிகள் ஊராட்சி தலைவர் மற்றும் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அதிகாரிகள் உறுதி

அப்போது உங்களது கோரிக்கையை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுப்பதாக மின்வாரிய அதிகாரிகள், போலீசார் உறுதி அளித்தனர். இதனை தொடர்ந்து அவர்கள் தர்ணா போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். ஊராட்சி தலைவி மற்றும் பொதுமக்கள் தர்ணாவில் ஈடுபட்ட சம்பவம் மின்வாரிய அலுவலகம் முன்பு பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags:    

மேலும் செய்திகள்