சத்தியமங்கலம் நெடுஞ்சாலைத்துறை அலுவலகத்தில் பணியாளர்கள் போராட்டம்

சத்தியமங்கலம் நெடுஞ்சாலைத்துறை அலுவலகத்தில் பணியாளர்கள் போராட்டம்

Update: 2022-07-08 21:20 GMT

சத்தியமங்கலம்

சத்தியமங்கலம் மற்றும் தாளவாடி உட்கோட்டத்தில் 40-க்கு மேற்பட்ட சாலை பணியாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.

இந்த நிலையில் சத்தியமங்கலம் மற்றும் தாளவாடி உட்கோட்டத்தில் பணிபுரியும் பெரும்பாலான சாலை பணியாளர்கள் சத்தியமங்கலம் நெடுஞ்சாலைத்துறை அலுவலகம் முன்பு ஒன்று திரண்டார்கள். 20 ஆண்டுகள் பணி முடித்த சாலை பணியாளர்களுக்கு சிறப்பு தேர்வு நிலை ஊதியம் வழங்க வேண்டும் என விதிமுறை உள்ளது. ஆனால் கடந்த ஏப்ரல் மாதத்தில் 20 ஆண்டுகள் பணி முடிந்தும் இன்னும் சிறப்பு ஊதியம் வழங்கப்படவில்லை. உடனே சிறப்பு ஊதியம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி நெடுஞ்சாலைத்துறை பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்