பா.ஜ.க.வினர் உண்ணாவிரத போராட்டம்

தர்மபுரி தொலைபேசி நிலையம் முன்பு தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற வலியுறுத்தி பா.ஜ.க.வினர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2022-07-05 16:44 GMT

தர்மபுரி தொலைபேசி நிலையம் முன்பு தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற வலியுறுத்தி பா.ஜ.க.வினர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

உண்ணாவிரத போராட்டம்

தர்மபுரி மாவட்ட பா.ஜ.க. சார்பில் தமிழக அரசை கண்டித்தும், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும் தர்மபுரி தொலைபேசி நிலையம் முன்பு நேற்று உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட தலைவரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான பாஸ்கர் தலைமை தாங்கினார். மாவட்ட பொது செயலாளர் வெங்கட்ராஜ், நிர்வாகிகள் முருகன், பிரவீன், மாவட்ட பொருளாளர் சிவகுமார், மாநில விவசாய அணி செயலாளர் அழகு உள்ளிட்ட நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். இதில் மாநில துணைத்தலைவர் நரேந்திரன் கலந்து கொண்டு உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கி வைத்து பேசினார். தமிழகத்தில் உடனே மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும். தேர்தல் அறிக்கையில் அறிவித்தபடி குடும்ப தலைவிக்கு மாதம் ரூ.1,000 வழங்க வேண்டும். பெட்ரோல், டீசல் மீதான வாட் வரியை குறைக்க வேண்டும். சமையல் சிலிண்டருக்கு ரூ.100 மானியம் வழங்க வேண்டும்.

தேர்தல் வாக்குறுதி

தி.மு.க. கொடுத்த தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. இதில் மாவட்ட துணைத்தலைவர்கள் முரளி, ஷோபன், கிருத்திகா, செல்ல பாண்டியன், ஐவண்ணன், சிவசக்தி, சிவன், ராஜேந்திரன், மாவட்ட செயலாளர்கள் டாக்டர் சுப்பிரமணியம், சரிதா, சவுந்தரராஜன், மாவட்ட அணி தலைவர்கள் மதியழகன், இமானுவேல், காவேரி வர்மன், சங்கீதா உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

மாநில செயற்குழு உறுப்பினர் வரதராஜன் உண்ணாவிரதத்தை முடித்து வைத்தார். முடிவில் நகர தலைவர் சக்திவேல் நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்