பூசாரிப்பட்டியில்தனியார் பஸ்சை சிறை பிடித்து பொதுமக்கள் போராட்டம்

பூசாரிப்பட்டியில் தனியார் பஸ்சை சிறை பிடித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2023-10-01 20:24 GMT

ஓமலூர்

பூசாரிப்பட்டியில் தனியார் பஸ்சை சிறை பிடித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தனியார் பஸ்

சேலத்தில் இருந்து தர்மபுரி செல்லும் தனியார் பஸ் மற்றும் சில அரசு பஸ்கள் இடைநிலை பஸ் என கூறி பண்ணப்பட்டி பிரிவு, பூசாரிப்பட்டி, தீவட்டிப்பட்டி உள்ளிட்ட இடங்களில் நிற்காமல் சென்று வருகிறது. நேற்று முன்தினம் இரவு பூசாரிப்பட்டி பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவர் சேலம் புதிய பஸ் நிலையத்தில் இருந்து தர்மபுரி செல்லும் தனியார் பஸ்சில் ஏறி உள்ளார்.

அப்போது பயணியிடம் பூசாரிப்பட்டியில் பஸ் நிற்காது என கூறி டிக்கெட் மட்டும் வாங்கி கொண்டு தர்மபுரி பஸ் நிலையத்தில் இறக்கி விட்டுள்ளனர். இதையடுத்து அந்த வாலிபர் தர்மபுரியில் இருந்து பூசாரிப்பட்டிக்கு வந்து நடந்த சம்பவம் குறித்து பொதுமக்களிடம் தெரிவித்தார்.

சிறை பிடிப்பு

இந்தநிலையில் நேற்று பொதுமக்கள் பா.ம.க. மாவட்ட தலைவர் மாணிக்கம் தலைமையில் நேற்று அந்த தனியார் பஸ்சை சிறை பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்ததும் தீவட்டிப்பட்டி போலீசார் விரைந்து வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக போலீசார் தெரிவித்தனர்.

இதையடுத்து அவர்கள் பஸ்சை விடுவித்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்