வாழப்பாடியில் தி.மு.க. அரசை கண்டித்துபா.ஜனதாவினர் பிச்சை அளிக்கும் போராட்டம்

Update: 2023-09-06 20:36 GMT

வாழப்பாடி

சேலம் மாவட்டம் வாழப்பாடி பஸ் நிலையம் பகுதியில் பா.ஜனதா கட்சியின் பட்டியல் அணி சார்பில் பிச்சை அளிக்கும் நூதன போராட்டம் நடைபெற்றது. இதில் கட்சியின் சேலம் கிழக்கு மாவட்ட தலைவர் சண்முகநாதன் கலந்து கொண்டு பேசினார். மாவட்ட பட்டியல் அணி தலைவர் பாஸ்கர் முன்னிலை வகித்தார். நிர்வாகிகள் அயோத்தி ராமச்சந்திரன், வாழப்பாடி குணசேகரன் உள்ளிட்ட பலரும் உடனிருந்தனர்.

தி.மு.க., தேர்தல் வாக்குறுதியாக தெரிவித்த நீட் தேர்வில் விலக்கு அளிக்கப்படவில்லை, மகளிர் உரிமைத்தொகை ஆயிரம் என தெரிவித்து, தற்போது தகுதியானவர்கள் என தெரிவித்துள்ளனர். சிலிண்டருக்கு 100 ரூபாய் மானியம் வழங்கவில்லை. கல்வி கடன் ரத்து செய்யப்படவில்லை, சாராயம் ஒழிக்கவில்லை, அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டம் வழங்கவில்லை, ஆனால் தற்போது மின் கட்டணம், சொத்து வரி, உயர்ந்துள்ளது என்பன போன்ற விமர்சனங்களை முன்வைத்து பா.ஜனதாவினர் கோஷங்கள் எழுப்பினர்.

தமிழக அரசுக்கு நிதி வழங்குவதாக கூறி நாணயங்களை வழங்கி பிச்சை அளிக்கும் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் இப்பகுதியில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்