தேசிய கொடி ஏற்றுவதில் குழப்பம் விளைவித்தால் கடும் நடவடிக்கை

தேசிய கொடி ஏற்றுவதில் குழப்பம் விளைவித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் குமாரவேல்பாண்டியன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Update: 2022-08-14 11:36 GMT

தேசிய கொடி ஏற்றுவதில் குழப்பம் விளைவித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் குமாரவேல்பாண்டியன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

சுதந்திர தினம்

இந்திய நாட்டின் 75-வது சுதந்திர தின அமுதபெருவிழாவை கொண்டாடும் வகையில் மத்திய, மாநில அரசுகளின் உத்தரவின் பேரில் பொதுமக்கள் தங்களது தேசபற்றை வெளிப்படுத்தும் வகையில் வேலூர் மாவட்டத்தில் 3 நாட்கள் பொதுமக்கள் பலர் தங்கள் வீடுகளில் தேசிய கொடி ஏற்றி உள்ளனர்.

இந்தநிலையில் சுதந்திர தினத்தையொட்டி வேலூர் மாவட்ட கலெக்டர் குமாரவேல்பாண்டியன் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

கடும் நடவடிக்கை

சாதி, மதம், பாலின வேறுபாடின்றி வேலூர் மாவட்டத்தில் உள்ள 247 கிராம ஊராட்சிகளிலும் சம்பந்தப்பட்ட ஊராட்சி மன்ற தலைவராலும், அனைத்து ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் ஒன்றியக்குழு தலைவராலும் மட்டுமே தேசிய கொடி ஏற்றி உரிய மரியாதை செலுத்த வேண்டும். அவர்களுக்கு பதிலாக குடும்ப உறுப்பினர்கள் மற்றும் வேறு எவரேனும் கொடியை ஏற்றுவதாக குழப்பம் விளைவித்தால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

தேசிய கொடி ஏற்றுவது தொடர்பாக கிராமப்புறங்களில் ஆட்சேபனைகள் அல்லது புகார்கள் ஏதும் இருந்தால் கட்டணமில்லா தொலைபேசி எண் 1077-க்கு தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம். தேசிய கொடியினை அவமதிப்பு செய்பவர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்