14 வயதுக்குட்பட்ட குழந்தைகளை பணியில் அமர்த்தினால் கடும் நடவடிக்கை
14 வயதுக்குட்பட்ட குழந்தைகளை பணியில் அமர்த்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனர்.;
குழந்தை மற்றும் வளரிளம் பருவ தொழிலாளர் (தடை செய்தல் மற்றும் முறைப்படுத்துதல்) சட்டத்தின் கீழ், பெரம்பலூர் மாவட்ட தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) மூர்த்தி தலைமையில், அரியலூர் மாவட்ட குழந்தை தொழிலாளர் தடுப்பு படையினருடன் அரியலூர் நகரில் உள்ள உள்ள 17 உணவகங்கள் மற்றும் இனிப்பகங்களில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின் போது, 18 வயதுக்குட்பட்ட குழந்தைகளை அபாயகரமான தொழில்களில் ஈடுபடுத்த கூடாது, 14 வயதுக்குட்பட்ட குழந்தைகளை எந்தவொரு பணியிலும் அமர்த்த கூடாது. அவ்வாறு பணிக்கு அமர்த்தும் நிறுவனங்களின் உரிமையாளர் மீது 6 மாத காலம் வரை சிறை தண்டனையும் ரூ.50 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்படும். மேலும், குழந்தைகளை பணியில் ஈடுபடுத்தும் பெற்றோர்கள் மீதும் குற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டது.