ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனம் ஓட்டினால் கடும் நடவடிக்கை

ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனம் ஓட்டினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Update: 2023-06-05 18:54 GMT

கலந்தாய்வு கூட்டம்

வேலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் மாதாந்திர குற்ற கலந்தாய்வு கூட்டம் போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன் தலைமையில் நேற்று நடந்தது.

கூட்டத்தில் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்தில், சாலை விபத்துக்களை தடுப்பது பற்றியும், கண்டுபிடிக்க முடியாத சில வழக்குகளில் விரைந்து கண்டுபிடிக்கவும், நீதிமன்றத்தில் நீண்ட காலமாக நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து முடிப்பதற்கும், கள்ளச்சாராயத்தை ஒழிக்கவும் போலீஸ் சூப்பிரண்டு அறிவுரை வழங்கினார்.

ஹெல்மெட்

மேலும் சாலை விபத்துக்களை தடுக்கும் நோக்கத்தில் சாலை பாதுகாப்பு விதிகளை சரியான முறையில் அனைவரும் பின்பற்ற வேண்டும்.

இருசக்கர வாகனம் ஓட்டுபவர்கள் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும். ஹெல்மெட் அணியாமல் வாகனத்தை ஓட்டினால் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்