வாட்ஸ்-அப்பில் போலி கணக்கு தொடங்கி பணமோசடியில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை-கலெக்டர் எச்சரிக்கை

வாட்ஸ்-அப்பில் போலி கணக்கு தொடங்கி பணமோசடியில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சேலம் மாவட்ட கலெக்டர் எச்சரிக்கை எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Update: 2022-06-12 21:50 GMT

சேலம்:

சேலம் மாவட்ட கலெக்டர் கார்மேகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

வாட்ஸ்-அப் செல்போன் செயலியில் போலியான பெயரில் கணக்குகளை வைத்திருந்து, பொதுமக்கள் மற்றும் அரசு உயர் அலுவலர்களிடம் பணமோசடி முயற்சிகள் தற்போது நடைபெறுவதாக தகவல்கள் வருகிறது.

குறிப்பாக வாட்ஸ்-அப்பில் மாவட்ட கலெக்டர் பெயரில், புகைப்படத்துடன் அமேசான் செயலிகள் மூலம் ஆன்லைன் வாயிலாக கிப்ட் கார்டு உள்ளிட்டவற்றிற்கு தங்கள் வங்கி கணக்கில் பணம் செலுத்திட கேட்டு செய்திகள் அனுப்பப்படுகின்றன. இதுபோன்ற பணமோசடியில் ஈடுபடும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ள போலீசாருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்