பெண்களுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை

திருவாரூர் மாவட்டத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என புதிதாக பொறுப்பேற்ற போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமாா் கூறினாா்.

Update: 2023-10-18 19:15 GMT

திருவாரூர்;

திருவாரூர் மாவட்டத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என புதிதாக பொறுப்பேற்ற போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமாா் கூறினாா்.

போலீஸ் சூப்பிரண்டு பொறுப்பேற்பு

திருவாரூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக பணியாற்றிய சுரேஷ்குமார் தென்காசி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக பணியிட மாறுதல் செய்யப்பட்டார். இதைத்தொடர்ந்து திருவாரூர் மாவட்ட புதிய போலீஸ் சூப்பிரண்டாக ஜெயக்குமார் நேற்று பதவி ஏற்றார். இவர் சென்னை சி.பி.சி.ஐ.டி. பிரிவு போலீஸ் சூப்பிரண்டாக பணிபுரிந்து பணியிட மாறுதல் பெற்று வந்துள்ளார்.புதிதாக பொறுப்பேற்ற போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் நிருபர்களிடம் கூறியதாவது:-

நடவடிக்கை

திருவாரூர் மாவட்டம் விவசாயம் சார்ந்த மாவட்டமாக உள்ளது.இங்கு சட்டம்- ஒழுங்கு பிரச்சினை பெரிதாக இல்லை என்றாலும் மக்கள் எந்தவித பாதிப்பும் இன்றி வாழ தேவையான பாதுகாப்பு நடவடிக்கை எடுக்கப்படும். பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபடுவார்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். தொடர்ந்து குற்றங்களில் ஈடுபடுவர்கள் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும்.போக்குவரத்து நெரிசல் இல்லாத மாவட்டமாக திருவாரூர் உருவாக்கப்படும். பொதுமக்கள் எந்த நேரத்திலும் 9363495720 என்ற செல்போன் எண்ணில் எந்தவித பிரச்சனை குறித்தும் தகவல் அளிக்கலாம். தகவல் தெரிவிப்பவர்கள் பெயர் விவரங்கள் ரகசியம் காக்கப்படும். கஞ்சா, புகையிலை பொருட்கள் விற்பனை முற்றிலும் தடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்