மின்மோட்டார் மூலம் குடிநீர் உறிஞ்சுபவர்கள் மீது நடவடிக்கை
மின்மோட்டார் மூலம் குடிநீர் உறிஞ்சுபவர்கள் மீது நடவடிக்கை
அவினாசி
மின் மோட்டார் மூலம் குடிநீர் உறிஞ்சவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வார்டு சபா கூட்டத்தில் பொதுமக்கள் புகார் தெரிவித்தனர்.அவினாசி பேரூராட்சி வார்டு சபா கூட்டம் வி.ஒ. சி காலனி பகுதியில் நேற்று நடந்தது. பேரூராட்சி தலைவர் தனலட்சுமி பொன்னுசாமி தலைமையில் நடந்த கூட்டத்தில் வார்டு உறுப்பினர்கள் அப்பகுதியைச் சேர்ந்த பெண்கள் உள்ளிட்டபொதுமக்கள் பங்கேற்றனர் அப்போது தலைவர் தனலட்சுமி பொன்னுசாமி பேசுகையில்உங்களது குறைகளை தெரிவித்தால் உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறினார் அப்போது அப்பகுதியைச் சேர்ந்த பெண்கள் இங்கு ஏராளமான குடியிருப்புகள் உள்ளன குடிநீர் சப்ளை செய்யப்படும் சமயங்களில் சிலர் தங்களது வீடுகளில் மின் மோட்டார் மூலம் குடிநீரை அதிக அளவில் எடுத்துக் கொள்கின்றனர்.இதனால் பல வீடுகளுக்கு தேவையான அளவு குடிநீர்கிடைப்பதில்லை மேலும் ஆழ்குழாய் கிணற்று தண்ணீர் விடும் நேரத்தை அதிகப்படுத்த வேண்டும்.இப்பகுதியில் சாக்கடை பல இடங்களில் தேங்கி நிற்பதால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு பொதுமக்கள் உடல்நலம் பாதிக்கப்படுகின்றனர். எனவே தினசரி சாக்கடையை சுத்தம் செய்ய வேண்டும். மேலும் இந்த பகுதியில் ரோடு குண்டு குளியுமாக பயனற்ற நிலையில் உள்ளது. ரோட்டை பராமரிப்பு பணி செய்ய வேண்டும் என்று கூறினர்.தங்களது கோரிக்கைகள் அனைத்தும் நிவர்த்தி செய்ய நடவடிக்கை எடுப்பதாக தலைவர் உறுதி கூறினார்