தெருவோர வியாபாரிகள் சங்கம் ஆர்ப்பாட்டம்
ஓசூரில் ஸ்மார்ட் கார்டு வழங்கக்கோரி தெருவோர வியாபாரிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
ஓசூர்:-
ஓசூரில் ஸ்மார்ட் கார்டு வழங்கக்கோரி தெருவோர வியாபாரிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
ஆர்ப்பாட்டம்
கிருஷ்ணகிரி மாவட்ட ஏ.ஐ.டி.யு.சி. தெருவோர வியாபாரிகள் சங்கம் சார்பில் ஓசூர் பழைய நகராட்சி அலுவலகம் எதிரில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு சங்க மாவட்ட செயலாளர் சின்னசாமி தலைமை தாங்கினார்.
இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் எம்.லகுமய்யா கலந்து கொண்டு பேசினார். ஏ.ஐ.டி.யு.சி. மாவட்ட பொதுச்செயலாளர் மாதையன், செந்தில், ஆதில், பாஸ்கர ரெட்டி உள்பட பலர் கலந்து கொண்டு பேசினர்.
கோஷங்கள்
ஆர்ப்பாட்டத்தில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அனைத்து தெரு வியாபாரிகளையும் கணக்கெடுத்து அனைவருக்கும் ஸ்மார்ட் கார்டு, வியாபார சான்று வழங்க வேண்டும். வணிக தேர்தலை முறையாக நடத்த வேண்டும். அனைவருக்கும் வங்கிக்கடன் வழங்கவேண்டும்.
மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி பகுதிகளில் தெருவோர வியாபாரிகளை முறையாக கணக்கெடுத்து அவர்களுக்கு பயோ மெட்ரிக் கார்டு வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. இதில் சங்க நிர்வாகிகள், தெருவோர வியாபாரிகள் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.