பழனி பகுதியில் வைக்கோல் விற்பனை மும்முரம்

பழனி பகுதியில் வைக்கோல் விற்பனை மும்முரமாக நடந்து வருகிறது.

Update: 2023-03-17 19:00 GMT

பழனி மற்றும் அதன் சுற்றுப்புற பகுதியில் பாலாறு-பொருந்தலாறு, வரதமாநதி அணை மூலம் பயிர் சாகுபடி நடந்து வருகிறது. கடந்த ஆண்டு மழை நன்றாக பெய்ததால் நீர்நிலைகள் எல்லாம் நிரம்பியதால் விவசாயிகள் நெல் சாகுபடி செய்திருந்தனர். தற்போது பல இடங்களில் நெற்கதிர்கள் விளைந்துள்ளதால் அறுவடை பணி தொடங்கியுள்ளது. எந்திரம் மூலம் விவசாயிகள் நெல்லை அறுவடை செய்து சாக்குமூட்டைகளில் கட்டி வியாபாரிகளிடம் விற்று வருகின்றனர்.

பழனி பகுதியில் நெல் அறுவடை பணிகள் தொடங்கும்போது வெளியூர் வியாபாரிகள் வந்து வைக்கோலை மொத்தமாக விவசாயிகளிடம் வாங்கி செல்வது வழக்கம். அதன்படி தற்போது வியாபாரிகள் பழனியில் முகாமிட்டு வைக்கோலை வாங்கி செல்கின்றனர். இது ஒருபுறம் இருக்க வியாபாரிகள் பலர் சாலையோர பகுதியில் வைக்கோலை கட்டி விற்று வருகின்றனர். இவற்றை மாடு வைத்துள்ள விவசாயிகள் வாங்கி செல்கின்றனர். ஒரு கட்டு வைக்கோல் ரூ.150 வரை விற்பனை செய்யப்படுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்