எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் ஆர்ப்பாட்டம்

எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.;

Update:2023-10-15 00:30 IST

பாலஸ்தீனம் மீது இஸ்ரேல் ராணுவம் நடத்திவரும் தொடர் தாக்குதலை கண்டித்து ராமநாதபுரம் சந்தை திடலில் ராமநாதபுரம் கிழக்கு மாவட்ட எஸ்.டி.பி.ஐ. கட்சி சார்பில் மாவட்ட தலைவர் ரியாஸ்கான் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மேற்கு மாவட்ட தலைவர் நூருல் அமீன், பொதுச்செயலாளர் பாஞ்சு பீர், கிழக்கு மாவட்ட துணைத்தலைவர் சுலைமான், பொதுச்செயலாளர் அப்துல் ஜமீல், மாவட்ட செயலாளர் ஆசாத், திருவாடானை தொகுதி தலைவர் சிராஜுதீன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பெரியபட்டினம் நகர்தலைவர் பீர் முகைதீன் வரவேற்று பேசினார். ஆர்ப்பாட்டத்தில் மாநில செயலாளரும், மதுரை மண்டல தலைவருமான அபூபக்கர் சித்தீக் கலந்து கொண்டு பேசினார். இதில், விவசாய அணி மாவட்ட தலைவர் கஜினி முகமது உள்பட மாவட்ட, தொகுதி, நகர் நிர்வாகிகள், பெண்கள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். 

Tags:    

மேலும் செய்திகள்