எஸ்.டி.பி.ஐ. கட்சி தொடக்க விழா
நெல்லையில் எஸ்.டி.பி.ஐ. கட்சியின் 15-ம் ஆண்டு தொடக்க விழா நடந்தது.;
நெல்லையில் எஸ்.டி.பி.ஐ. கட்சியின் 15-ம் ஆண்டு தொடக்க விழா நேற்று நடந்தது. மாநில தலைவர் நெல்லை முபாரக் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு கொடியேற்றி, நலத்திட்ட உதவிகளை வழங்கினார். மாவட்ட தலைவர் சாகுல் ஹமீது உஸ்மானி, பொதுச்செயலாளர் கனி, ஆரிப் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
பின்னர் நெல்லை முபாரக் பேசுகையில், ''மக்கள் துயரத்தில் இருக்கும் போதெல்லாம் எஸ்.டி.பி.ஐ. எப்போதும் மக்களின் சேவையில் இருக்கும். கொரோனா பெருந்தொற்றின்போது நம்முடைய அர்ப்பணிப்பு மற்றும் ஈடு இணையற்ற மனிதாபிமான சேவை எப்போதும் மறக்க முடியாதது. நாம் எப்போதும் மக்கள் சேவகராக இருப்போம், மக்கள் தேவைகள் மற்றும் மக்கள் அரசியலுக்கான போராட்டத்தில் முன்னணியில் இருப்போம்'' என்று கூறினார்.
தொடர்ந்து நெல்லை மாநகர் மாவட்டம் பாளையங்கோட்டை, நெல்லை தொகுதிக்கு உட்பட்ட சுத்தமல்லி, பேட்டை, டவுன், பாளையங்கோட்டை, மேலப்பாளையம், மானூர், தாழையூத்து, பர்கிட்மாநகரம், சந்தைப்பேட்டை பகுதியில் உள்ள அனைத்து வார்டுகளில் கட்சிக்கொடி ஏற்றப்பட்டு மரக்கன்றுகள் வழங்கப்பட்டது.