எஸ்.டி.பி.ஐ. கட்சி செயற்குழு கூட்டம்

ஏர்வாடியில் எஸ்.டி.பி.ஐ. கட்சி செயற்குழு கூட்டம் நடந்தது.

Update: 2022-11-11 20:04 GMT

ஏர்வாடி:

எஸ்.டி.பி.ஐ. கட்சியின் ஏர்வாடி நகர செயற்குழு கூட்டம் நகர தலைவர் அன்வர் தலைமையில் நடைபெற்றது. நகர துணைச் செயலாளர் முகைதீன், பொருளாளர் ரிஸ்வான், செயற்குழு உறுப்பினர் சாம் சஹாப்தீன் மற்றும் அனைத்து கிளை நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

கூட்டத்தில் ஏர்வாடி பீலி குளம் மற்றும் பொன்னாகுறிச்சி குளத்தின் நில அளவைகளை முறையாக அளவீடு செய்ய பலமுறை மனு அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. ஏர்வாடி மக்களின் நீர் ஆதாரமாக விளங்கும் குளங்களின் எல்கைகளை பாதுகாக்க உடனடியாக ஆவன செய்யவில்லை எனில் நான்குநேரி தாலுகா மற்றும் பேரூராட்சி நிர்வாகத்தை கண்டித்து மக்களை திரட்டி ஆர்ப்பாட்டம் நடத்துவது, ஏர்வாடி பேரூராட்சி முழுவதும் கொசு மருந்து அடிக்க பேரூராட்சி நிர்வாகத்தை கேட்டுக் கொள்வது, எஸ்.டி.பி.ஐ. கட்சியின் சார்பாக கிளை வாரியாக பொதுமக்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்குவது என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Tags:    

மேலும் செய்திகள்