மாண்டஸ் புயல் : மாநில அவசர கட்டுப்பாட்டு மையத்தில் முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு

சென்னை, எழிலகத்தில் உள்ள மாநில அவசர கட்டுப்பாட்டு மையத்தில் முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார்.

Update: 2022-12-09 14:04 GMT

சென்னை,

மாமல்லபுரத்திற்கு தென்கிழக்கில் 135 கி.மீ தொலைவில் நிலை கொண்டுள்ளது மாண்டஸ் புயல். சென்னைக்கு தெற்கு தென்கிழக்கு திசையில் 170 கி.மீ. தொலைவிலும் நிலை கொண்டுள்ளது. மணிக்கு 14 கி.மீ. வேகத்தில் மாண்டஸ் புயல் நகர்ந்து வருகிறது. இன்று இரவு அல்லது நாளை காலைக்குள் புயல் கரையை கடக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் சென்னை, எழிலகத்தில் உள்ள மாநில அவசர கட்டுப்பாட்டு மையத்தில் முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார்.மாண்டஸ் புயல், மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளிடம் முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் கேட்டறிந்தார்

பேரிடர் மேலாண்மை கட்டுப்பாட்டு அறையை ஆய்வு செய்தபின் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:

எந்த மழை வந்தாலும், என்ன காற்றடித்தாலும் அதை சமாளித்து, மக்களை காக்கும் நடவடிக்கைகளில் தொடர்ந்து அரசு ஈடுபட்டு வருகிறது. மாவட்டங்களில், அரசின் நடவடிக்கைகளுக்கு மக்கள் ஒத்துழைப்புக் கொடுத்துக்கொண்டு இருக்கின்றனர் என்றார்.


Tags:    

மேலும் செய்திகள்