மாநில எல்லையில் தமிழக வாகனங்கள் நிறுத்தம்

காவிரியில் தண்ணீர் திறந்து விடுவதை கண்டித்து கர்நாடகாவில் கன்னட அமைப்புகள் சார்பில் முழு அடைப்பு நடைபெற்றது. இதனால் தமிழகத்தில் இருந்து கூடலூரில் இருந்து கர்நாடகா செல்லும் லாரிகள் மாநில எல்லையில் தடுத்து நிறுத்தப்பட்டன.

Update: 2023-09-26 21:00 GMT

கூடலூர்

காவிரியில் தண்ணீர் திறந்து விடுவதை கண்டித்து கர்நாடகாவில் கன்னட அமைப்புகள் சார்பில் முழு அடைப்பு நடைபெற்றது. இதனால் தமிழகத்தில் இருந்து கூடலூரில் இருந்து கர்நாடகா செல்லும் லாரிகள் மாநில எல்லையில் தடுத்து நிறுத்தப்பட்டன.

கர்நாடகாவில் முழு அடைப்பு

டெல்டா மாவட்டங்களில் தண்ணீர் இன்றி நெற்பயிர்கள் கருகி வருகிறது. இதனால் காவிரியில் தண்ணீர் திறந்து விட வேண்டும் என வலியுறுத்தி தமிழக அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் முறையிடப்பட்டது. இதைத்தொடர்ந்து தமிழகத்துக்கு தண்ணீர் திறந்து விட உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து காவிரியில் தண்ணீர் திறந்து விடுவதை கண்டித்து கன்னட அமைப்புகள் மாநிலம் முழுவதும் பந்த்துக்கு (முழு அடைப்பு) அழைப்பு விடுத்தது.

இதைத்தொடர்ந்து நேற்று பெங்களூரு உள்பட கர்நாடகாவில் வேலை நிறுத்தம் நடைபெற்றது. மேலும் பல இடங்களில் கன்னட அமைப்புகள் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டனர். இதன் காரணமாக அங்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. மேலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழகத்தில் இருந்து வாகனங்கள் கர்நாடகாவுக்கு இயக்கப்பட வில்லை.

நீலகிரி மாவட்டம் கூடலூரில் இருந்து கர்நாடகாவுக்கு செல்வதற்காக காலை 6 மணிக்கு கேரளா மற்றும் தமிழக பதிவு எண்கள் கொண்ட சரக்கு லாரிகள் வந்தது.

லாரிகள் தடுத்து நிறுத்தம்

இதைக்கண்ட போலீசார் தொரப்பள்ளியில் லாரிகள் உள்ளிட்ட வாகனங்களை தடுத்து நிறுத்தினர். அப்போது கேரளா டிரைவர்கள் கர்நாடகாவுக்கு செல்ல அனுமதிக்க வேண்டுமென போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதேபோல் கர்நாடகாகவில் இருந்து மசினகுடிக்கு செல்ல இருந்த வாகன ஓட்டிகளும் அதிருப்தி அடைந்தனர். பின்னர் காலை 8 மணிக்கு கேரள பதிவு எண்கள் கொண்ட சரக்கு லாரிகள் தொரப்பள்ளி சோதனை சாவடி வழியாக கர்நாடகாவுக்கு செல்ல போலீசார் அனுமதி அளித்தனர்.

ஆனால் தமிழக பதிவு எண்கள் கொண்ட அனைத்து வகையான வாகனங்கள் அனுமதிக்காததால் ஆங்காங்கே நிறுத்தி வைக்கப்பட்டது. இதேபோல் கர்நாடகாவில் இருந்து கூடலூர், ஊட்டிக்கு இரு மாநில பஸ்களும் இயக்கப்படவில்லை. இதனால் மாநில எல்லையில் போக்குவரத்து இன்றி வெறிச்சோடி காணப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்