பஸ்கள் நிறுத்துவதை முறைப்படுத்த வேண்டும்

பழனி பஸ் நிலையத்தில் பஸ்கள் நிறுத்துவதை முறைப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தினர்.

Update: 2023-09-23 22:45 GMT

தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தினர் நேற்று பழனி வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் மனு ஒன்றை கொடுத்தனர். அந்த மனுவில், பழனிக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வருகை தருகின்றனர். அவர்களில் பெரும்பாலானோர் பஸ்கள் மூலமாகதான் பழனிக்கு வருகை தருகின்றனர். இதில் முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் என பலரும் உள்ளனர். இவர்கள் சொந்த ஊர் செல்வதற்காக பழனி பஸ் நிலையத்தில் பஸ்சிற்காக காத்திருக்கின்றனர். இந்தநிலையில் பஸ்களை அதற்கு உரிய ரேக்குகளில் நிறுத்தாமல் ஆங்காங்கே நிறுத்தி செல்கின்றனர். இதனால் பஸ்சிற்காக காத்திருக்கும் பயணிகள் கடும் சிரமம்படுகின்றனர். மேலும் மாற்றுத்திறனாளிகள் பஸ்களின் படிகட்டில் ஏறமுடியாமல் தவிக்கும் சூழல் உள்ளது. எனவே பழனி பஸ் நிலையத்தில் பஸ்கள் நிறுத்துவதை முறைப்படுத்த அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்