மரங்களில் பூத்துக்குலுங்கும் கல் ரோஜாக்கள்

கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவில் மரங்களில் கல் ரோஜாக்கள் பூத்து குலுங்கின.

Update: 2023-02-10 19:00 GMT

'மலைகளின் இளவரசி'யான கொடைக்கானலில் கடந்த சில மாதங்களாக குளிர் மற்றும் கடும் பனி நிலவி வருகிறது. கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவில் பனி காலங்களில் மட்டும் கேமலியா ஜப்பானிகா என்று அழைக்க கூடிய கல் ரோஜா மலர்கள் பூத்துக்குலுங்கும். இந்த ரோஜாவின் இதழ்கள் கடினமாக இருப்பதால் அது கல் ரோஜா என்று அழைக்கப்படுகிறது. இந்நிலையில் தற்போது அங்குள்ள மரங்களில் இளஞ்சிவப்பு, வெள்ளை, சிவப்பு உள்ளிட்ட 3 நிறங்களில் கல் ரோஜாக்கள் பூத்துக் குலுங்குகின்றன, பூங்காவில் முகப்பு பகுதி, தடாகத்தின் அருகே உள்ள மரத்தில் ரோஜா பூக்கள் பூத்துக்குலுங்குகின்றன.

செடிகளில் மட்டும் ரோஜா பூக்கள் பூத்திருப்பதை கண்ட சுற்றுலா பயணிகள் மரத்தில் பூத்துள்ள ரோஜாவை ஆச்சரியத்துடன் பார்த்து ரசித்து புகைப்படம் எடுத்து செல்கின்றனர். பிரையண்ட் பூங்காவில் அதிக பூக்கள் இல்லாத நிலையில் இதனை சுற்றுலா பயணிகள் ரசித்து மகிழ்கின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்