மினிபஸ் மீது கல்வீசி தாக்குதல்

தூத்துக்குடியில் இரண்டு வாலிபர்கள் மினிபஸ் மீது கல்வீசி தாக்கியதில் கண்ணாடி சேதம் அடைந்தது.

Update: 2022-08-24 12:31 GMT

தூத்துக்குடி புதிய பஸ் நிலையத்தில் இருந்து தாளமுத்துநகர் அருகே உள்ள சிலுவைப்பட்டிக்கு நேற்று முன்தினம் இரவு ஒரு மினிபஸ் சென்று கொண்டு இருந்தது. அந்த பஸ் புதிய முனியசாமிபுரம் பகுதியில் வந்த போது, அங்கு ரோட்டில் நின்று கொண்டு இருந்த 2 வாலிபர்கள் மினிபஸ்சுக்கு வழிவிடாமல் தகராறு செய்ததாக கூறப்படுகிறது. இதனை பஸ்சில் இருந்த பயணிகள் கண்டித்து சத்தம் போட்டு உள்ளனர். ஆத்திரம் அடைந்த வாலிபர்கள் பஸ் மீது கல்வீசி தாக்கினர். இதனால் பஸ்சின் பின்பக்க கண்ணாடி சேதம் அடைந்தது. ஆனால் பயணிகள் யாருக்கும் காயம் ஏற்பட வில்லை. இது குறித்து தகவல் அறிந்த தாளமுத்துநகர் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர்.

Tags:    

மேலும் செய்திகள்