ரூ.15 லட்சம் மதிப்பிலான 21 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல்

தஞ்சை அருகே பல்வேறு இடங்களில் திருடிய ரூ.15 லட்சம் மதிப்புள்ள 21 மோட்டார் சைக்கிள்களை பறிமுதல் செய்த போலீசார் வாலிபர் ஒருவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Update: 2023-08-05 21:30 GMT

வல்லம்;

தஞ்சை அருகே பல்வேறு இடங்களில் திருடிய ரூ.15 லட்சம் மதிப்புள்ள 21 மோட்டார் சைக்கிள்களை பறிமுதல் செய்த போலீசார் வாலிபர் ஒருவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மோட்டார் சைக்கிள்கள் திருட்டு

தஞ்சை அருகே உள்ள வல்லம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் தொடர்ந்து மோட்டார் சைக்கிள்கள் மற்றும் ஸ்கூட்டர்கள் திருட்டு போனது. மோட்டார் சைக்கிள் திருடர்களை கைது செய்யபோலீஸ் சூப்பிரண்டு ஆஷிஸ்ராவத் உத்தரவின் பேரில் வல்லம் துணை போலீஸ் சூப்பிரண்டு நித்யா மேற்பார்வையில் சப்-இன்ஸ்பெக்டர் அடைக்கல ஆரோக்கியசாமி டேவிட், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சாமிநாதன், மற்றும் போலீசார் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது.

விசாரணை

தனிப்படை போலீசார் மோட்டார் சைக்கிள் திருடர்களை தீவிரமாக தேடி வந்தனர். இந்நிலையில் நேற்று தஞ்சை - புதுக்கோட்டை சாலையில் உள்ள திருக்கானூர்பட்டி நான்கு ரோடு சந்திப்பில் தனிப்படை போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்முன்னுக்கு பின் முரணாக பதில் கூறினார். இதைத்தொடர்ந்து போலீசார் அந்த வாலிபரை வல்லம் போலீஸ் நிலையத்துக்கு கொண்டு சென்று தீவிர விசாரணை நடத்தினர்.

கைது

விசாரணையில் அவர் தஞ்சை அருகே உள்ள அம்மன்பேட்டையை சோ்ந்த தளபதி (வயது 34) என்றும் அவர் மற்றும் அவரது நண்பர்கள் சேர்ந்து தஞ்சையில் பல்வேறு இ்டங்களில் மோட்டார் சைக்கிள்களை திருடியது தெரிய வந்தது.இதைத்தொடர்ந்து தளபதியை கைது செய்த ேபாலீசார் அவர் பதுக்கி வைத்திருந்த ரூ.15 லட்சம் மதிப்புள்ள 21 மோட்டாா் சைக்கிள்களை பறிமுதல் செய்தனர். மேலும் மோட்டார் சைக்கிள்கள் திருட்டு தொடர்பாக தளபதியின் கூட்டாளிகளை போலீசார் தேடி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்