திருடிய மோட்டார் சைக்கிளை 4 கிலோ மீட்டர் தள்ளிச் சென்ற மர்ம நபர்

நெல்லையில் திருடிய மோட்டார் சைக்கிளை 4 கிலோ மீட்டர் தூரம் தள்ளிச் சென்ற மர்மநபரை போலீசார் தேடி வருகின்றனர்.

Update: 2022-12-08 19:24 GMT

நெல்லையில் திருடிய மோட்டார் சைக்கிளை 4 கிலோ மீட்டர் தூரம் தள்ளிச் சென்ற மர்மநபரை போலீசார் தேடி வருகின்றனர்.

மோட்டார் சைக்கிள் திருட்டு

நெல்லை மேலப்பாளையம் குறிச்சி பகுதியை சேர்ந்தவர் முருகேஷ் குமார். இவர் மளிகை கடை நடத்தி வருகிறார். கடந்த 4-ந் தேதி தேதி வியாபாரத்தை முடித்துவிட்டு குறிச்சியில் உள்ள தனது வீட்டின் முன்பு மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு தூங்க சென்று விட்டார்.

மறுநாள் காலையில் வந்து பார்த்தபோது அவரது மோட்டார் சைக்கிளை காணவில்லை. இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த அவர், தன்னுடைய நண்பர்கள் உதவியுடன் மோட்டார் சைக்கிளை தேடும் பணியில் ஈடுபட்டார். மேலும் இது தொடர்பாக மேலப்பாளையம் போலீஸ் நிலையத்திலும் புகார் அளித்தார்.

போலீசார் மற்றும் நண்பர்கள் உதவியுடன் அந்த பகுதியில் பொருத்தப்பட்டு உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவாகி உள்ள காட்சிகளை ஆய்வு செய்தனர்.

4 கிலோ மீட்டர்...

அதில் நள்ளிரவு 12 மணிக்கு ஒரு வாலிபர் நடந்து வந்துள்ளார். அவர் முருகேஷ்குமார் வீட்டின் முன்பு நிறுத்தி இருந்த மோட்டார் சைக்கிளை நைசாக திருடினார். பின்னர் அங்கிருந்து மோட்டார் சைக்கிளை ஸ்டார்ட் செய்யாமல் தள்ளிக்கொண்டு செல்லும் காட்சிகள் பதிவாகி இருந்தது.

இதையடுத்து அவர் எந்த பாதையில், எப்படி சென்றார் என்பதை பல்வேறு கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனர். அதில் அந்த மர்மநபர் மோட்டார் சைக்கிளை தொடர்ந்து மேலப்பாளையம் சந்தை வரை தள்ளிச்சென்று உள்ளார். பின்னர் அங்கிருந்து மீண்டும் 4 கிலோமீட்டர் தூரம் வரை, அதாவது கொக்கிரகுளம் பகுதியையும் தாண்டி அவர் செல்லும் காட்சிகள் பதிவாகி இருந்தது. நேற்று இந்த வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து மேலப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபரை வலைவீசி தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்